Ad Widget

யாழில் காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற 235 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமாகி 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் யாழ்.மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் காணாமல் போனோர் தொடர்பில் 1620 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நல்லூர், யாழ்ப்பாணம், கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் ,தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகவே ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்கின்றது.

இதேவேளை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகளை புறக்கணிக்கப்போவதாக காணாமல்போன உறவுகள் தெரிவித்திருந்த போதும் உறவுகள் கலந்து கொண்டு சாட்சியம் அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts