Ad Widget

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்யும் அடையால் அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையினால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உயர்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்க உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதும் மழை தொடர்ந்து பெய்துவருவதால் அங்குள்ள குளங்கள் நிரம்பி வழிவதோடு, குறிப்பாக கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால், திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குள மக்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் தொடர்ந்து பெய்த மழையால், கனகாம்பிகை குளத்தின் வான்கட்டில் அண்மையில் கசிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

kili-flood-malai-2

kili-flood-malai-1

Related Posts