Ad Widget

உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்

சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலைக்கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இத்னால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்குமென அஞ்சுன்றனர்.

கடல்மட்டம் அதிகரிப்பதால் நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பமடைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது.

இதனால் வரும் அரை நூற்றாண்டுக்குள் இவை முழுவதுமாக உருகிவிடும். மேலும் கடல்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

புவி வெப்பமயமாதலால் உலகில் கடலின் உயரம் எட்டு அங்குலம் உயர்ந்து உள்ளது ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை இந்த கிரீன்லாந்து பனிப்படலங்களும் முழுவதுமாக உருகிவிட்டால் கடல்மட்டம் தற்போது இருப்பதில் இருந்து 23 அடி வரை உயரலாம் இதனால் உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதனால் மூழ்கும்.

சீனாவின் ஷாங்காய் நகரம் கடல் நீரில் , முழ்கும் அபயா நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம்,நியூசவுத்வேல்ஸ்,துருக்கியின் இஸ்தான்புல் இந்த நிகரங்களில்,கடலில் மூழ்கும் ஆபத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இது போல் துபாய் கடலில் மூழ்கும் நகரங்களில் முதன்மையாக உள்ளது.

Related Posts