சாதாரண தர பரீட்சை : கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை

2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக...

சென்னை மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் ஈழ அகதிகள்

தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர். சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு,...
Ad Widget

ஊக்கமருந்து பயன்பாடு: கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அண்மையில், பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தின் போது, காலக்கிரமமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதாக, இலங்கை கிரிக்கட்...

தமிழக அரசை குறை கூறினேனா? – கமல்ஹாசன் விளக்கம்

சமீபத்தில் கமல் இணையதளம் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு எதிராக பேட்டியளித்ததாக வெளிவந்த செய்தி மற்றும் அந்த பேட்டியளித்த கமலை கண்டித்து அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் விதமாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று? என்று நான் கேள்வி எழுப்பியதுபோல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு...

பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்லாமல் பேராசைக்காரகளால் நிவாரணப்பொருட்கள் சூரை: நடிகர் சித்தார்த்

சென்னை நகரம் முதல் மழையால் பாதிக்கப்பட்ட போதை நடிகர் சித்தார்த் வட இந்திய ஊடகங்களை விமர்சித்தது ஒளரவிற்கு நிலைமையை அவர்களுக்கு புரிய வைத்தது என்றே தோன்றுகிறது. தற்போது இரண்டாவது முறையாக சென்னை கனமழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களிடையே உதவிகளை செய்து...

இந்திய அணி அபார வெற்றி!

4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 117.5 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 127 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட்...

20 மாணவர்களுக்கு HIV : பல்கலை அனுமதியின்போது மாணவர்களுக்கு HIV பரிசோதனை!

பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது...

வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம், எதிர்க்கக்கூடாது! – சம்பந்தன்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக்...

திருகோணமலைக் கடலில் சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களுடைய சடலங்கள் ?

திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு...

உலக்கையால் அடி வாங்கிய பொலிஸார்!

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச்...

விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!

சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

வவுச்சர் திட்டத்தில் இணைய மாட்டோம்: ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம்

அடுத்த வருடம் மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள வவுச்சர் வழங்கும் திட்டத்தில் தாம் ஈடுபடப் போவதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

முல்லை பிரசாந்தின் குருதிபடிந்த மண் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு

வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள தமிழக மக்களை துயரில் இருந்து மீட்க அனைவரும் முன்வரவேண்டும்

தமிழக மக்களை துயரில் இருந்து மீட்க அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியீடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்... அண்மைய வாரங்களாக தமிழகத்தில் பெய்த பயங்கர மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர் முழுமையாக சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. ஓட்டுமொத்த மக்களினதும் வாழ்வாதாரங்கள், அசையும் அசையாச்...

பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் முறைப்பாடுகள்! – யாழ்.அரச அதிபர்

பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் 3 அல்லது 4 முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்திற்கு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள், மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பலர் நேரில் சென்று முறையிட தயக்கம் மற்றும் அச்சம் போன்ற பல காரணங்களினால், குறித்த சம்பவங்கள் வெளிவராமல் போவதால் மாவட்டச்...

கணிதம் சித்தியடையாவிட்டாலும் கற்கையை தொடரும் முறை

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும்முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்....

இலங்கை பெண்ணின் மரண தண்டனை பிற்போடப்பட்டது

திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால்...

கடும் மழையால் 60,000 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக 60,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 2,300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நேற்று (06) தெரிவித்தது.இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார்...

தமிழர் வரலாற்றில் 2016 அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்!

2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தவை...
Loading posts...

All posts loaded

No more posts