நீதிமன்ற களஞ்சிய அறையில் அலைபேசி வெடித்ததில் ஆவணங்கள் நாசம்

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சான்று பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறையில் இருந்த அலைபேசியொன்று இன்று புதன்கிழமை (17) காலை வெடித்ததில் அறையினுள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அருகிலிருந்த சான்றுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. அலைபேசியின் மின்கலம் வெடித்து தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, விரைந்து...

விண்ணப்பம் கோரல்

கிராம அலுவலர் தரம் 3இல் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள், உள்நாட்டலுவல்கள் அமைச்சால் கோரப்பட்டுள்ளது. 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தரத்தில் 4 திறமைச் சித்திகளுடன் 6 சித்திகளும் க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர்...
Ad Widget

தெற்காசியாவின் வேகமான மனிதர், மங்கை இலங்கையில்

இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100m ஓட்டத்தில் இலங்கை வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் தெற்காசியாவில் மிகவும் வேகமான மனிதர் மற்றும் மங்கை எனும் பெருமையை இலங்கையின் ஹிமாஷா இஷான் மற்றும் ருமேஷிகா ரத்நாயக்க ஆகியோர் பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி மற்றும் மேகாலயா மாநிலத் தலைநகர்களின் 12ஆவது...

6 கோடி பட்ஜெட்டில் விஜய் ஆண்டனியின் எமன்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் படம் வருகிற மார்ச் 4-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடித்து வந்தபோதே சைத்தான் என்ற படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தில் நடித்து முடித்து விட்டார். ஆனால் இரண்டு பாடல்கள் பேலன்ஸ் உள்ளதாம். அதனால் தற்போது அந்த பாடல்களை கம்போஸ் செய்து...

3 நாள் ஓடினாலே சக்சஸ் என்கிறார்களே! – ஒய்.ஜி.மகேந்திரன்

ஆகம் என்ற படத்தில் எனக்கு சிறிய ரோல்தான். என்றாலும் ஒரு நல்ல படத்தில் நாட்டுக்குத்தேவையான கருத்தை சொல்லும் படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த ஆகம் படக்கதையை நான் கேட்டபோது எனது நினைவுகள் 35 வருடத்துக்கு பின்னாடி சென்றது. அப்போது இந்த பட...

அனுஷ்காவை பேட்டி எடுத்த கெளதம்மேனன்!

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் கெளதம்மேனன், சில படங்களையும் தயாரித்தவர். இந்நிலையில், தற்போது அவர் யு-டியூப்பில் ஒரு சேனல் தொடங்கியிருக்கிறார். அந்த சேனலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி, ஜி தமிழில் ஒளிபரப்பாகும சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிகள் போன்று சினிமா பிரபலங்களிடம் தான் பேட்டி எடுக்கிறாராம் கெளதம்மேனன். அந்த வகையில், தனது...

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சியாரா நிவேடா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி!

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு...

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாகவும்,சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 1 ரூபா 50 சதமாகவும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளர் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94...

பிறிதொரு மாகாணத்தை உருவாக்க வேண்டும் – பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பகுதிகளான பொலனறுவை, சேருவா, மினிப்பே, மஹியங்கனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தை உருவாக்குதன் மூலம், கிழக்கு மாகாணத்தை தமிழ், முஸ்லிம் மக்களுக்கான மாகாணமாக மாற்றி வடக்கையும் கிழக்கையும் இணைந்த அலகை உருவாக்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு...

எக்னெலிகொட வழக்கு: தமிழர்கள் இருவர் இரகசிய வாக்குமூலமளிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் இருவரும், அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர். காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் இருவரே, இவ்வாறு அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர். அவ்விருவரும், ஹோமாக நீதிமன்ற நீதவான ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை...

கைது செய்வதை தடுத்துநிறுத்துமாறு பசில், மனுத்தாக்கல்

தன்னைக் கைது செய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏனைய வழக்குகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அடிப்படை உரிமைமீறல் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! – பொலிஸாரின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயம்!!

வேலையில்லாப் பட்டாதாரிகள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும், தண்ணீர்ப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசு அளித்திருந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றவில்லை. எனவே, தங்களது வேலைவாய்ப்பு உடன்...

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரக் கல்லூரியை விடுவிக்க நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் நடேஸ்வரக் கல்லூரியை விடுவித்து மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக்கு அண்மையாக இருக்கும் பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் 25 வருடங்களின் பின்னர்...

யாழில் மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

யாழ்ப்பாணத்தில் ரயில் கடவையில் வாயில் மூடியிருந்த போது, பயணித்த மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக ஒரு வருட காலத்துக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வாயில் மூடியிருக்கும் போது, ரயில் கடவைகளில் பயணிக்க முற்படுபவர்களை கைதுசெய்ய ரயில்வே திணைக்களத்தால் விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த...

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எனது எதிர்பார்ப்பு!

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன்...

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும்...

4 பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளனர். தங்களது வீரர்களால் கற்பழிக்கப்பட்ட அந்த பெண்களை ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள் அப்பெண்களை கல்லால் அடித்து கொலை...

தாய்க்கு உணவளிக்காமல், நிர்வாணமாக அடைத்துவைத்திருந்த மகள் கைது!

வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார்...

அதிர்ஷடமில்லை என குழந்தைகளை அனாதைகளாக்கும் ஆப்பிரிக்கர்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மூடவழக்க பழக்கங்களும் அதிக அளவில் உண்டு. இதன் காரணமாக , ராசியில்லாதவர்கள், சூனியக்காரர்கள் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கைவிடப்படும் பிள்ளைகள் எண்ணிக்கை அங்கு அதிகமாக வருகிறது. அத்தகைய குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க லொவென் என்பவர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts