- Tuesday
- May 19th, 2026
ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் (நேற்றுடன்) நிறைவடைகின்றது. இந்தநிலையில் இதன்...
தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அருண் வைத்திய நாதன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வரும் நிபுணன் படத்தில் என்கவுண்டர் பண்ணும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி. பெரும்பாலும் தான் நாயகனாக நடிக்கும் படங்களில் அர்ஜூன்தான் இந்த மாதிரி வேலைகளை செய்வார். ஆனால் இந்த படத்தில் அவரை மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கவைத்துள்ள அருண் வைத்தியநாதன், வரலட்சுமிக்கு...
ஆர்யா நடித்த 'ஓரம் போ', மிர்ச்சி சிவா 'வா' என்கிற குவார்ட்டர் கட்டிங் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இயக்கும் மூன்றாவது படத்தில் மாவதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் தமிழில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது...
சிலர் எனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒருகட்டத்தில் அரசியலில் பிரவேசிப்பார்கள். சிலர் அரசியல் ஆசை இருப்பதை சொல்வார்கள் ஆனால் அவர்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாது. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை உணர்த்தும் வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் களமிறங்கியது. அதோடு, சில படங்களில்...
ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரத்தைத் தற்போது காவல்துறையினர் விசாரித்துவருவதாக...
Project Loon என அழைக்கப்படும் அதிவேக இன்ரநெட் வழங்கும் கூகிள் பலூன் Google’s balloon ஒன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வான்வெளியில் செலுத்தப்பட்டு இலங்கைக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் பரிசோதனைகள் மேற்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் மூன்று பலூன்கள் சில வாரங்களில் இலங்கையை நோக்கி வரும் எனவும் ICTA (nformation and Communication Technology Agency...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொள்கைக்கு அமைவாக கிராம அலுவலர் சேவையின் வினைதிறனை விரிவுபடுத்துமுகமாக நாடு பூராக சேவையற்றும் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இதற்கான தகவல்கள் திரட்டப்படுவதாக தெரியவருகின்றது. கிராம அலுவலர்களின் பெயர் விவரம், கடமைப்பிரிவு, நியமனக்காலம், சேவைக்காலம், பதவியை உறுதிப்படுத்தல், ஒழுக்காற்று, நடவடிக்கைகள்...
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் பெறும் குழு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டோரிடமிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்று வருகின்றனர். அந்தவகையில் நேற்றய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்...
வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மதில் பாய்ந்து ஓடித்தப்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அடாவடிக் குழு, அவரைத்தேடி அடாவடித்தனத்தில்...
நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...
மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் அதனை விட மோசமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார். மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதிகமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான்...
யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு...
'போரினால் ஏற்பட்ட இழப்புக்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர முடியும்' என்று வடக்கு மாகாண சபை உறுப்பனர் எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் அமைப்பு சீர்திருத்த மக்கள் கருத்தறியும் குழுவிடம் தெரிவித்தார். 'கடந்த காலத்தில் நாட்டில் இருந்த அனைத்து அரசாங்களாலும் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டன. தற்போது அரசியல் அமைப்பு...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை பிரஜைகள் ஐவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள், அவுஸ்திரேலியா எஸ்.எக்டி 01 என்ற விசேட விமானத்தின் மூலமாக, நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினர். இந்த குழுவினர், பேருவளை பிரதேசத்திலிருந்து வியங்க என்ற படகிலேறி ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினர். அதன்பின்னர், அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் 3 லட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலான மதிப்பீட்டு...
"எங்கள் இனத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர புதிய அரசமைப்பில் வழிசெய்ய வேண்டும்."- இவ்வாறு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த 'புதிய அரசமைப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை அறியும் குழு'வுக்குத் தகவல் அளித்தார் பொதுமகன் ஒருவர். புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி மூலமான தீர்வே அவசியம்....
"வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்.''- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று...
நுவரெலியா - ராகலை - சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார். முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு...
இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீதனம் என்பது பெண்கள் மீது...
Loading posts...
All posts loaded
No more posts
