Ad Widget

விஜய்யின் அரசியல் படம்!

சிலர் எனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒருகட்டத்தில் அரசியலில் பிரவேசிப்பார்கள். சிலர் அரசியல் ஆசை இருப்பதை சொல்வார்கள் ஆனால் அவர்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாது. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை உணர்த்தும் வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் களமிறங்கியது.

அதோடு, சில படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளும் பேசினார் விஜய். ஆனால், அதையடுத்து அவரது படங்கள் வெளியாகும்போது ஏற்பட்ட அரசியல் தடைகளால் இப்போது அரசியல் பற்றி அவர் பேசுவதே இல்லை. ஆனபோதும், தெறி படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய், அரசியல்வாதிகளை துவம்சம் செய்கிறாராம். அதோடு, தெறி படத்தின் இரண்டாம் பாகம் அதிரடியான அரசியல் கதையில் தயாராகிறதாம்.

தற்போது நடித்துள்ள தெறி படத்தை அடுத்து பரதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் விஜய், அந்த படத்தையடுத்து தெறி-2வில் நடிக்கிறாராம். அந்த படம் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படம் போன்ற அரசியல் கதையில் உருவாகிறதாம்.

Related Posts