Ad Widget

அதிர்ஷடமில்லை என குழந்தைகளை அனாதைகளாக்கும் ஆப்பிரிக்கர்கள்

ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மூடவழக்க பழக்கங்களும் அதிக அளவில் உண்டு. இதன் காரணமாக , ராசியில்லாதவர்கள், சூனியக்காரர்கள் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கைவிடப்படும் பிள்ளைகள் எண்ணிக்கை அங்கு அதிகமாக வருகிறது.

shockingly-emaciated-boy-found-starving-and-naked-after_SECVPFஅத்தகைய குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க லொவென் என்பவர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு சிறுவன் உடலில் துணி இல்லாமல் சாலையில் சுற்றி திரிவதை பார்த்த லொவென் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவரும் அந்த சிறுவனுக்கு ஹோப்(நம்பிக்கை) என்று பெயர் வைத்துள்ளனர்.

பிறந்ததிலிருந்து துரதிர்ஷடமான செயல்கள் நடந்ததால் பெற்றோர்கள் அக்குழந்தை அனாதையாக விட்டு உள்ளனர்.

இது தொடர்பாக லொவென் கூறியதாவது. இதைப்போன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் அதிர்ஷடமில்லை என குற்றஞ்சாட்டப்பட்டு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.என கூறினார்.

Related Posts