சமஸ்டி நாடுகள் பிரிந்து செல்லவில்லை!- முதலமைச்சர்

சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் எதுவும், பிரிந்து செல்லவில்லை, இணைந்தே இருக்கின்றன. தென்னிலங்கை அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள்...

மாணவி தற்கொலை முயற்சி!! : ஆசிரியருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் மாணவி ஒருவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ். சிவசுப்ரமணியம் முன்னிலையில் கிளிநொச்சி பொலிசார் ஆஜர்ப்படுத்தினர். இதனை அடுத்து எதிர்வரும் நான்காம் திகதிவரைக்கும் குறித்த...
Ad Widget

காணாமற்போனோரின் உறவுகளுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல்!

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களிடம் இருந்தே தொலைபேசி மூலமாகவும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐம்பது பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து முறையிட்டுள்ளனர். கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும்...

காங்கேசன்துறையின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு படையினர் இணக்கம்

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியிருப்பதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேஸ்வரா கல்லூரி 26 வருடங்களாக பல இன்னல்களுக்கு மத்தியில் தெல்லிப்பளை பகுதியில் இயங்கி வருகின்றது. 1990ஆம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அப்பகுதி மக்களுடைய காணிகளும் பாடசாலைகளும்...

போதையில் வாகனம் செலுத்தினால் சிறை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஆகக்கூடியது 3 மாத விளக்கமறியலும் அபராதத்துடன் கூடிய 1 மாத கால சிறைத்தண்டனையும் வழங்குமாறு யாழ். மேல் நீதிமன்றத்துக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவுறுத்தினார். இதேவேளை, விபத்தின் போது நபரொருவர் உயிரிழந்தார் எனின், அவ்விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்கு பதிவு...

யாழில் பெண்ணின் சடலம் மீட்பு! கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!!

நுணாவில் இராசா கடைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். விஜிதரன் யாழினி (வயது 35) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது. குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். இது கொலையாக...

அநுராதபுரம், மகஸின் சிறைகளில் 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம்...

பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை பிரயோகித்திற்கு எதிராக யாழ்ப்பாணத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பட்டதாரிகள் நேற்றய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர்கள், எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நல்லாட்சி அரசாங்கம் தீர்வு திட்டத்தினை வழங்க...

மெல்போனில் இலங்கைப் பெண் கொலை – ஒருவர் விளக்கமறியலில்

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இலங்கைப் பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் 21 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த 48 வயதான பெண் தனது கணவருடன் 1999ம் ஆண்டு மெல்போன் நகரில் குடியேறியுள்ளார். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த வேளை,...

விஜயகாந்த் பதவி பறிபோனது!

தமிழகத்தில், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த எட்டு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தைவிட...

வடக்கு, கிழக்கு வீட்டுத்திட்டம் திடீரென திசை மாறுகின்றது!!

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட...

வட மாகாண வேலையற்றோர் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்பாட்டம் நடத்த திட்டம்

வேலையற்ற பட்டதாரிகளால் சங்கத்தினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் வீச்சு தாக்குதலை நடாத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்திருந்தனர்....

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர முன் ஆவேசமாகப் பேசிய மூத்த இராணுவ அதிகாரி!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, இராணுவத்தின் கீழ்ப்படியாமை நிலையை நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக பதற்றமடையாத மங்கள சமரவீர சிரேஸ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்த ஆவேசமான கருத்துக்களால் அதிர்ச்சியடைந்தார். படையணியொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே சீற்றத்துடன்...

நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!

நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை தனதாக்கி சாதனைபுரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜா ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் தனது நீச்சல் திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம்...

வடக்கு மாகாணசபையுடனும் முதலமைச்சருடனும் இணைந்து செயற்படுவேன்! – புதிய ஆளுநர்

வடக்கு மாகாணசபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். என வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களது பிரசன்னம் எனக்கு மகிழ்ச்சியை...

ஜனாதிபதி, பிரதமரைக் கொல்லுமாறு முகநூல் மூலம் கோரியவரைக் கைது செய்ய உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு படையினரிடம் முகநூல் ஊடாக கோரிக்கை விடுத்தவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகநூல் ஊடாக ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்யுமாறு காணொளி காட்சி ஒன்றை வெளியிட்ட குறித்த நபர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு...

வவுனியா மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்! ஹர்த்தால்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13வயது மாணவிக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் கலந்துரையாடல் வன்னி நாடாளுமன்ற...

தான் எப்போதும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹ, பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க துரோகிகள் முயற்சி

இந்த நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தை சில துரோகிகள் குழு சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டையில் வைத்து கூறினார். தனது தேவை நாட்டில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வசதியற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழிலை உருவாக்குவது என்றும், அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்க...

கிளிநொச்சியில் கால்நடைத்தீவன உற்பத்திப் பயிற்சி

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த வியாழக்கிழமை (18.02.2016) கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts