- Tuesday
- May 19th, 2026
கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நாளைய தினம் (24) ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரப்பட்டுள்ளது. யாழ் திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தையும் முற்றாக நிறுத்தி ஹார்த்தால் இடம்பெற வேண்டும் என கோரிய துண்டு பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளன....
வவுனியாவில் அண்மையில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றிருந்தது....
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியல் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை...
பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனம். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியற் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் என்டர்டெயின்ற்மென்ற் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு புத்தர்...
வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது. இத்தகைய கொடூரமான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான...
பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு பலாலி விமானத் தளம் விஸ்தரிப்புப் பற்றிக் கூறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு மற்றும் தடைகளையும் மீறி, பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படும் என பாதுகாப்பு...
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி,...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தை வென்ற கலைஞன். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கும் வரவில்லை. சினிமாவுக்கும் வரவில்லை. பல வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் அண்ணன் சாரங்பாணியின் பேரன் ராமச்சந்திரன், 'கபாலி தோட்டம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிஷா என்ற புதுமுகம் ஹீரோயின், விக்கி என்ற இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். கோலிசோடா மதுசூதனன் வில்லனாக...
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த ஹீரோவை வைத்து எடுக்கப்படும் அடுத்தடுத்தப் படங்கள் ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் சாயலிலேயே எடுக்கப்படுவது திரையுலகில் சகஜமான விஷயம். ரசிகர்களுக்கு அலுப்பூட்டக்கூடிய விஷயம் இது என்பதை உணராமலே வெற்றி சென்ட்டிமெண்ட் என்று அதே அம்சங்களை அடுத்தடுத்த படங்களில் வலிய திணிப்பதும் உண்டு. தனி ஒருவன் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார் ஜெயம்ரவி....
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ‘கபாலி' மற்றும் ‘2.0' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று...
வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி க.ஹரிஸ்ணவி (வயது 13) தொடர்பில் பொலிஸார் நான்கு குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை எவரும் கைதாகவில்லை என தெரியவருகிறது. சந்தேகத்தின் பெயரில் பலரிடமும் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ள போதும் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆரம்பித்தில் இக்கொலை தொடர்பிலான...
ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கம்பளை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் கம்பளை சிங்கபிட்டி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரின்...
வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்துக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச்...
அ.தி.மு.க. போல் தி.மு.க.வும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை சேர்ப்பதற்காக திரைமறைவில் பேச்சுக்கள் நடாத்தி வருகின்றது. இது தொடர்பாக தி.மு.க. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், மகளிர் அணி நிர்வாகி விஜயா தாயன்பன் ஆகியோருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. அ.தி.மு.க. வில் தேர்த்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. ஆனால் தி.மு.க. வில்...
"நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இலங்கையைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும்."- இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். சாரணர் இயக்கத்தின் தேசிய ஜம்போரி ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார். அவர் தனது...
வாள்கள், கத்திகளுடன் முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுடன் யாழ்ப்பாணம் - இணுவிலில் நின்ற 'ஆவா' குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயத்துடன் தப்பித்தார். மூவரை கைது செய்து கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இணுவில் காரைக்கால் சிவன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் மதியமளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை முதல் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. நடப்புச் சம்பியனான இலங்கை அணி முதல் போட்டியில் வரும் வியாழக்கிழமை (25) மிர்பூரில் விளையாடவுள்ளது. தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணியுடனேயே இலங்கை விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் ஒரு...
இனவாத போக்கினை உடையவர்கள் வேறு கட்சி உருவாக்க வேண்டுமென்று கூறிவருகின்றனர். ஆனாலும், விமல் மற்றும் கம்மன்பில வேறுகட்சி ஆரம்பித்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடையே இன, மத, ஜாதி பேதங்களைக் கொண்டுவரும் நபர் அல்ல என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும்...
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும்...
9வது தேசிய சாரணர் ஐம்போறியினை, யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 04.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர்...
Loading posts...
All posts loaded
No more posts
