ஹர்த்தாலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்- ஆனந்தன் எம்.பி

வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு, இன, மத, மொழி பேதங்களை கடந்து முழுமையாக ஓத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வன்முறைக்கு எதிரான சமூக அமைப்பு சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

பலஸ்தீனத் தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு!

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.ஓ.எச்.டி. தார் சயிட் பாயிட் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.
Ad Widget

பங்களாதேஷை எளிதாக வென்றது இந்தியா

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நேற்று தொடங்கியது. மார்ச் 6–ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள்...

நியூசிலாந்துப் பிரதமருக்கு யானைக்குட்டி பரிசு: வன விலங்கு ஆர்வலர்கள் விமர்சனம்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள்...

ஈழ அகதிகள் முகாமில் அடிதடி – நால்வர் மீது வழக்கு, இருவர் கைது

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அடிதடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, பொலிசார் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும், சிவகுமார், உமேசன், ஆகியோருக்கும், செல்வம், திலீபன் என்பவர்களுக்கும், நேற்று முன்தினம், தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன....

நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முப்படையினர்

யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர், மற்றும் பொலிஸார் அக்காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 60 வீதமான காணிகளே இவ்வாறு நிரந்தரமாகச் சுவிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டச்...

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஐந்து பேர் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய கொழும்பு நீதவானால் இன்று புதன்கிழமை (24) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவி ஹரிஸ்ணவிக்காக வடக்கு மாகாணம் ஸ்தம்பிதம்!

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும் அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு மாகாணம் இன்று புதன்கிழமை ஸ்தம்பித்தது. வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையைக் கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டியும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் எங்கும் ஹர்த்தாலுக்கு அழைப்பு...

திக்கம் வடிசாலையை மீண்டும் கூட்டுறவு சங்கத்திடம் கையளிக்க தீர்மானம்!

பனை அபிவிருத்தி சபையினால் இது வரைக்கும் நிர்வகிக்கப்பட்டு வந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி கூட்டுறவு சங்கத்தின் கொத்தணிக்கு மீண்டும் பாரப்படுத்துவதாக நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய அமைச்சரவையின் பொருளாதார உபகுழு தெரிவித்துள்ளது. ஊழியர்கள், மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 13ஆம் திகதி நெல்லியடியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சந்தித்து இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தனர்....

தொடர்ந்து 25 வருடங்கள் சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்!- நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது தந்தை சங்கர நாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில்...

வடக்கு ஹர்த்­தா­லுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆத­ரவு

வவு­னி­யாவை சேர்ந்த 14 வயது சிறுமி க.ஹரிஸ்­ணவி பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குள்­ளா­க்கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்­னணி வட மாகா­ணத்தில் இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஹர்த்­தா­லுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. அதே­நேரம் யாழ்.பல்­கலை சமூ­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கும் தமது பூரண ஒத்­து­ழைப்­புக்களை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. மேலும் குறித்த...

ஹர்த்தாலை பூரணமாக அனுஷ்டிக்குமாறு கோருகின்றார் வட மாகாண போக்குவரத்து அமைச்சர்

கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் 24.02.2016 வட மாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்ரிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வட மாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா. டெனிஸ்வரன். மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த...

போர்க்களத்தில் ஒரு பூ திரப்படத்தை வெளியிட இலங்கை அரசு தடுக்கிறது!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரப்படத்தை வெளியிடுவதை இலங்கை அரசு தடுத்துவருகிறது என திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கூறியதாவது, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையில் பத்திரிகையாளர் இசைப்பிரியா குரூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக பல ஆவணப்படங்களை...

வடக்கில் இன்று பூரண ஹர்தாலுக்கு அழைப்பு! பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு!!

வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில...

மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!

கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...

ஹரிஷ்ணவி கொலையாளியை கண்டறியுங்கள்! பொலிஸாரிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்!!

வவுனியாவில் மாணவி ஹரிஷ்ணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசமைப்பு பேரவையை நியமிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...

தந்தையின் இறுதிச் சடங்கில் பற்கேற்க நளினிக்கு அனுமதி!

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு ராஜீவ் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரான சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவானபுரத்தில் வசித்து...

யாழ் சாரணர் ஜம்பொறியில் விசேட கண்காட்சி

சாமாதானத்திற்கான செய்தி என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 9வது தேசிய சாரணர் ஜம்பொறியை முன்னிட்டு சாரணர்களுக்கான விசேட கணட்காட்சியொன்றும் இடம்பெறுகின்றது. இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9வது தேசிய சாரணர் ஜம்பொறியானது உள்நாட்டுவெளிநாட்டு சாரணர்ககள் 10.000 பேரின் பங்குபற்றலுடன் மாசி மாதம் 20 திகதி முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதற்கு இணைவாக...

ஏழு வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

கோப்பாய், நீர்வேலி பகுதியில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை, ஏழு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சனிக்கிழமை (20) அதிகாலை வேளையில், கூரிய ஆயுதங்களுடன்...

மணற் காட்டில் தீ

வடமராட்சி, மணற்காட்டு, சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (23) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டிலே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெருமளவான மணற் பாங்கான பிரதேசமாக இருப்பதால் தீயணைப்பு வாகனத்தையோ பிற வாகனத்தையோ கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts