வடமராட்சி, மணற்காட்டு, சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (23) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டிலே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெருமளவான மணற் பாங்கான பிரதேசமாக இருப்பதால் தீயணைப்பு வாகனத்தையோ பிற வாகனத்தையோ கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.