கேரளா சட்டசபை தேர்தலை கண்காணிக்க சிறீலங்கா தேர்தல் ஆணையகத்துக்கு அழைப்பு

கேரளா தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கேரளா தேர்தல் ஆணையகம் கடிதம்மூலம் சிறீலங்கா தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். கேரள அரசின் அழைப்பிற்கிணங்க அடுத்த வாரமளவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவது...

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்

ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர் என ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல்...
Ad Widget

ஈ.பி.டி.பியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன்

'தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த பூர்வமாகச் செயற்படவுள்ளேன். இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புகிறேன். இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி, தனித்துச் செயற்படவுள்ளேன்' என முன்னாள்...

ஆணின் சடலம் மீட்பு

காங்கேசன்துறை வீதி, தாவடிப்பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தாவடி தெற்குப்பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஈக்குவடோரில் நிலநடுக்கம்: 233 பேர் பலி

இலத்தீன் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் வடகிழக்கு பசுபிக் கரையோரத்தை சக்தி வாய்ந்த 7.8 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 233 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரச நிறுவன கூட்டங்களில் போஷாக்கான உணவு / பழச்சாறு வழங்க திட்டம்

அரசாங்க நிறுவனங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகளில் போஷாக்கான உணவு அல்லது பழச்சாறு வழங்கும் தேசிய கொள்கையொன்று அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் 68 வீதமானவர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர். இதனை தடுக்கும் நோக்கிலேயே இக்கொள்கையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்....

யாழில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்

யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ்...

ஐ.பி.எல் போட்டிகளில் மாலிங்க விளையாட முடியாது

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு...

வடக்கு கால்நடை அமைச்சால் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...

வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்!

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து...

வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு பேஸ்புக் நிறுவனர் உதவி

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர...

பொலிஸ் நிலையத்திலிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (14) திருடப்பட்டிருந்த ரி-56 ரைபிளும் ஐந்து ரிவோல்வர்களும் லக்கலவிலுள்ள நீர்த்தாங்கியொன்றுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை ஆறு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து ஏறத்தாள ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெல்லேவெலவிலுள்ள சன்டகல விகாரையின் பகுதியில்...

மேரி கொல்வின் இலங்கை இனப்படுகொலையின் முக்கிய சாட்சி!

அவள் அவளது கட்டளைகளில் மிகத் தெளிவானவள். அவள் மிகவும் தைரியமானவள். அவள் அனுப்பப்பட்ட இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினாள். அவளது ஒரே நோக்கமும் அதுதான். அவளுக்கு தெரியும் இது அத்தனை எளிதான விடயம் இல்லை என்று. தன்னுடைய உயிரையே கொடுத்தவள் அவள். அவள் ஒரு சரித்திரம்;...

வடக்குக் கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்குத் தேவையில்லை!

வடக்குக் கிழக்கு ஒன்றாக இணைக்கவேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லையென விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள சாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையினரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் 23பேர் கைது!

நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில்...

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை கோருவோம்! கனடா பழமைவாதக் கட்சி!

ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனவும் சிறீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணையைக் கோருவோமென்றும் கனேடிய பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும்(NCCT) மற்றும் கனடாவில் தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், ஆட்டாவாவைச் சேர்ந்த...

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்கள்எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் குமமோட்டோவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. சில கட்டிடங்கள்...

காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என...

வெயிலால் முதியவர் சுருண்டு விழுந்து மரணம்!

முல்லைத்தீவு கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகே, வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முள்ளியவளை கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த 72 வயதான இளையதம்பி சுந்தரலிங்கம் என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், சிறுவர் பூங்கா பின் வீதியின் நடுவே மயங்கி விழுந்துள்ளதுடன், அவரை அருகே இழுத்துப்...

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை நாம் ஏற்கமாட்டோம்! -சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அமைய வேண்டும். தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை, நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts