வடக்கில் வெடிகுண்டுகளை நீக்குவதற்கு அமெரிக்காவினால் பயிற்சி

இலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு...

அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே புத்தாண்டு சுப நேரம் கணிக்கப்பட்டது

இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ...
Ad Widget

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இனிவரும் காலத்தில் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இணையம் ஊடாக விண்ணப்பிப்போருக்கு அவர்களின் கைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.

சாவகச்சேரியில் கடத்தப்பட்டவர் முன்னாள் போராளி!

சாவகச்சேரியில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி சார்பில் அவரது தாயார் சட்டத்தரணியுடன் நேற்று முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். தனது கணவர் முன்னாள் போராளி என்றும், புனர்வாழ்வு பெற்று கடந்த 2011ஆம்...

விரைவில் கைதாகிறார் நாமல் ராஜபக்ச!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த...

அமைச்சரவை மாற்றம் தேவையில்லை! வினைத்திறனின்மைக்கு 13 ம் சரத்தில் தான் பிழை- சம்பந்தன்

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது  பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம்...

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு துணைநிற்கின்றது!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...

இ-பேயில் 62 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நவாஸ்ஷெரீப்!

பிரபல வணிக இணையத்தளமான இ-பேயில் (e-bay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாஸ் ஷெரீப் தற்பொழுது கண் பரிசோதனைக்காக லண்டனில் தங்கியிருக்கும் நிலையில், அவரை விற்பனைக்கு விடுவதாக குறிப்பிட்ட இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது ஆரம்ப விற்பனை விலை 62 இலட்சமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, இந்தப்...

சித்திரைப் புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்...

வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி!உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில்இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாய கக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்அவர்கள், கடந்த காலங்களில் வடக்கின் கல்வி...

மலிங்கவுக்கு 17 கோடி

IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை. என்றாலும் இந்திய கிரிகெட் நிர்வாக சபைக்கு சஷாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த கொள்களையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை...

தினேஸ் குணவர்த்தனவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்றபிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து சுயலாபங்களை பெற்றுக் கொள்ள முனையாதீர்கள் என்று தினேஸ் குணவர்த்தனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன,கடந்தகாலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்...

ஐபிஎல் போட்டிகளில் லட்சங்களை அள்ளும் அழகிகள்

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென சீயர் லீடர் எனப்படும் நடன அழகிகளை ஒப்பந்தம் செய்து உள்ளன. நடன் அழகிகள் தத்தமது அணியினர் ரன் குவிக்கும்போதும், அடித்து ஆடும்போதும் உற்சாகமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்கின்றனர். இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து...

முதல் முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்

விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக லட்சுமி மேனன், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். 'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தின சிவா டைரக்டு செய்கிறார். ''இது, முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வியாபார ரீதியிலான படமாக இருக்கும். இந்த...

ஒரு கோடியே 40 லட்சம் சம்பளம் கேட்ட தமன்னா!

விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. எடுத்ததுமே "என் சம்பளம் ஒரு கோடியே நாற்பது லட்சம். அதை தர முடியுமா?'' என்று தமன்னா கேட்டாராம். அவருடைய சம்பளத்தை குறைத்து, அந்த படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமன்னா இறங்கி வருவாரா? என்று...

அஜீத்தின் 57 வது படத்தின் மீண்டும் ஜோடியாகும் அனுஷ்கா

‘வேதாளம்‘ படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் 57-வது படத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தையும் சிவா இயக்குகிறார். அஜீத் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கிரிதி சனோனிடம் பேச்சு வார்த்தை...

இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

ஏ - 9 வீதியில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் கிளிநொச்சி பிரதேசத்தைச்...

இடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது

மே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ​முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட வெட் வரி மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி...

பொலிஸ் பாதுகாப்புக் கேட்கிறார் யாழ். அரச அதிபர்!

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகரிடம், மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலக அறைக்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச...
Loading posts...

All posts loaded

No more posts