Ad Widget

முதல் முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்

விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக லட்சுமி மேனன், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா டைரக்டு செய்கிறார்.

”இது, முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வியாபார ரீதியிலான படமாக இருக்கும். இந்த படத்துக்கான புகைப்பட காட்சிகள், ஏவி.எம். ஸ்டூடியோவில் சமீபத்தில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்று டைரக்டர் ரத்தின சிவா கூறினார்.

Related Posts