சாவகச்சேரியில் கடத்தப்பட்டவர் முன்னாள் போராளி!

சாவகச்சேரியில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி சார்பில் அவரது தாயார் சட்டத்தரணியுடன் நேற்று முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

தனது கணவர் முன்னாள் போராளி என்றும், புனர்வாழ்வு பெற்று கடந்த 2011ஆம் ஆண்டு வெளியேறியவர் எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது கணவர் சுயதொழில் ஒன்றில் ஈடுபட்டுவந்த நிலையில் சிவில் உடை தரித்திருந்த இருவர் வெள்ளை வானில் வந்து கடந்த 10ஆம் திகதி காலை 9.30 அளவில் கடத்திச்சென்றதாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

Related Posts