Ad Widget

இ-பேயில் 62 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நவாஸ்ஷெரீப்!

பிரபல வணிக இணையத்தளமான இ-பேயில் (e-bay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் ஷெரீப் தற்பொழுது கண் பரிசோதனைக்காக லண்டனில் தங்கியிருக்கும் நிலையில், அவரை விற்பனைக்கு விடுவதாக குறிப்பிட்ட இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது ஆரம்ப விற்பனை விலை 62 இலட்சமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

இந்தப் பொருள் தற்போது பயன்பாட்டில் இல்லை. உற்பத்தி செய்யும்போது ஏற்பட்ட குறைபாட்டினால் இது எப்போதுமே செயலிழந்து காணப்படுகின்றது. இந்த நவாஸ் ஷெரீப் (பாகிஸ்தான் பிரதமர்) பொருளை வாங்குபவர்களுக்கு ஷாபாஸ் ஷெரீப் (நவாஸின் சகோதரர், பஞ்சாப் மாகாண முதல்வர்) இலவசமாக வழங்கப்படுவார். இந்த ஷாபாஸ் நாடகம், சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தது. ஆனால் அந்தப் பொருளால் வேறொரு பயனுமில்லை. இரண்டு பொருட்களினதும் பிறப்பிடம் பாகிஸதான். ஆனால் அவற்றை பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில்தான் அதிகமாகக் காண முடியும். தற்போது நவாஸ் பொருள் லண்டனில் உள்ளது.

nawaz-1460627113

இந்த விற்பனை விளம்பரம் சிறிது நேரத்தின் பின் அந்த இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.

Related Posts