வெயிலால் முதியவர் சுருண்டு விழுந்து மரணம்!

முல்லைத்தீவு கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகே, வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முள்ளியவளை கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த 72 வயதான இளையதம்பி சுந்தரலிங்கம் என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர், சிறுவர் பூங்கா பின் வீதியின் நடுவே மயங்கி விழுந்துள்ளதுடன், அவரை அருகே இழுத்துப் போட்ட அடையாளங்களும் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலத்தின் அருகே காகித உறை ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணியளவில் முல்லைத்தீவு நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்கள், வெயிலின் தாக்கத்தால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு வயோதிபர் மரணித்துள்ளதாக மரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

Related Posts