Ad Widget

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்கள்எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் குமமோட்டோவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. சில கட்டிடங்கள் அப்படியே சரிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்ட்டுள்ளனர். குமமோட்டோவில் உள்ள பல கிராமங்கள் நிலச்சரிவு மற்றும் சாலைகளால் சேதமடைந்துள்ளன. நிலநடுகத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 184 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கடந்த வியாழன் அன்று ஜப்பானின் கியூசு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் சிக்கி 9 பேர் பலியானார்கள். குமமோட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இதுவரை 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாலும், சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts