- Tuesday
- June 16th, 2026
தமிழ், தெலுங்கு அகிய இரு மொழிகளில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் ''தோழா''. அந்தப் படத்திற்க்கு பிறகு கார்த்திக் இரு மொழிகளிலும் இப்போது முன்னணி ஹீரோகளில் ஒருவராகிவிட்டார். கார்த்தி இப்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.''தனி ஒருவன்'' படத்திற்று கதை எழுதிய சுப, இயக்குனர் மணி ரத்னம் எடுக்கும்...
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு,மஞ்சிமா மேகன் நடித்து வெளிவர இருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.சிம்பு இதனைத் தொடர்ந்து திரிஷா இல்லேன்னா நயன்தாராபடத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான பெயரை மே 1ல் அறிவிப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் மூன்று வேடத்தில்...
அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தப்படங்கள் வீரம் மற்றும் வேதாளம். தற்போது அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இது அஜித்தின் 57வது படம் என்பதுடன், அஜித்-சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் ஹாட்ரி்க் படமாகும். தல 57படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இந்தபடத்தின் படப்பிடிப்பு உள்ளுர் மற்றும் சில வெளி...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். பின்னர் 46 வயதான இன்ஜமாம் உல்-ஹக் நிருபர்களிடம் கூறும் போது, ‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர்...
கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் மூழ்கியுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாற்பதுக்கும் அதிகமான கிழக்கு ஆப்ரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தங்களுடன் பயணிக்க ஆரம்பித்தவர்களின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் ஏராளமானோர் மூழ்கினர் என தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேக்கத்தின் கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், தாங்கள்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை மகிழ்ச்சியளிக்கும் மட்டத்தில் இல்லை என அவரது குடும்ப மருத்துவர் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ளுமாறும் இல்லையென்றால், கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மதுபானத்தை மட்டுப்படுத்துமாறும் மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் விளையாடுவார். 38 வயதான ஹெராத் 71 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 17...
ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் வினவிய போது, குறித்த பெண் பதிவு...
இளைய தளபதி விஜய் எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர். ஆனால், நேற்று நடிகர் சங்க நலனுக்காக நடந்த கிரிக்கெட் போட்டியில் விஜய் கலந்துக்கொள்ளததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து விசாரிக்கையில், நடிகர் சங்கம் தரப்பில் இந்த போட்டிக்கு அழைப்பு விடுத்த போது விஜய், ‘கண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன்’ என கூறியுள்ளார்....
கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். “மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த வீடுகளைப் பெறுவதற்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோன்று வவுனியா மாவட்டத்திலும், 8,500...
எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (வட் வரி), 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்றும் இதனால் நுகர்வோர் மாத்திரமன்றி,சிறு மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிக்கப்படுவர் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகள் போன்று தகவல் தொடர்புப்...
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65 ஆயிரம் உருக்கு வீடுகள் போதிய அத்திவாரங்களோ கூரை தொடர்பான ஆதரங்களோ இல்லாதவையாக காணப்படுவதாகவும், காற்றோட்ட வசதிகளும் இல்லாதிருப்பதாகவும் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடுகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பிரியன் டயஸ், டொக்டர் நக்கிகா கல்வத்துற...
கடவுள்களை வைத்து பிழைப்பு நடாத்தும் செயல் நாளுக்கு நாள் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கையில் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கோடிக்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது யாழ் அரச அதிபரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியமையால் அங்கு கூட்டங்கள் நடத்த அரசாங்க அதிபர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இவ் ஆலயம் அரசாங்க கோவில்...
தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, சில அரசியல்...
கொழும்பை நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில் ஸ்ரீலங்கன் விமானம் திடீரென மீண்டும் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. UL 309 என்ற ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்....
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்த விக்ரம் பிரபு அதையடுத்து நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் வாகா படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரருக்கும், பாகிஸ்தான் பெண்ணுக்குமிடையே உருவாகும் காதல் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராய் நடித்துள்ளார். தவிர,...
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. நட்சத்திர கிரிக்கெட் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தபின்னர், முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டனர். அதன்பின்னர் கட்டடம் கட்ட, நட்சத்திர கிரிக்கெட் போட்டி...
யாழில் அதிகரித்துச் சென்ற குற்றச் செயல்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என யாழ். காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி டி.பி.டி விஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுவாக புதுவருடத்தில் இரண்டு குற்றச்செயல்கள் மாத்திரமே இடம்பெற்ற தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழில் தற்போது பெருமளவான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில மாதங்களிற்கு முன்னர் ஒவ்வொரு நாளும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல்...
Loading posts...
All posts loaded
No more posts
