யாழில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனவாம்!

யாழில் அதிகரித்துச் சென்ற குற்றச் செயல்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என யாழ். காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி டி.பி.டி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக புதுவருடத்தில் இரண்டு குற்றச்செயல்கள் மாத்திரமே இடம்பெற்ற தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

DPD-Vijaya-Singa-police

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழில் தற்போது பெருமளவான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில மாதங்களிற்கு முன்னர் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு இடத்தில் கொலை, வாள் வெட்டு, திருட்டுச் சம்பவங்கள் என குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்பட்டன. இதனால் மக்கள் தமது அன்றாடச் செயற்பாடுகளைக் கூட அச்சத்துடனேயே செய்துவந்தனர்.

தட்டாதெருச் சந்தியில் மாணவர் குழுக்கள் வாள்வெட்டில் ஈடுபட்டிருந்தமையே இறுதியாக பதிவாகிய குற்றச் செயலாகும். இதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுவே இறுதியாக யாழில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவமாகும். தற்போது அனைத்துக் குற்றச் செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்.

எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க காவல் துறையினரை கண்காணிப்பிலீடுபடுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts