- Sunday
- November 8th, 2026
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்...
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனைத் தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குள் அத்துமீறி...
நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்களின் நிர்வாக முடக்க முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணக் காவல்துறை அதிகாரிக்கும் ஊழியர்களுக்குமிடையில் இடம்பெற்ற...
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அகிலேஸ்வரன் அகிலா (வயது14) என்றச் சிறுமியின் சடலம், திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த சிறுமி, சுகவீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற போது, கடந்த மார்ச் மாதம் 27...
யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையுடன் பேசி இது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லூர் ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை...
கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' கடந்த 11ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான 'சாஹசம் சுவாசகா சாகிப்போ'வும் அதே தினத்தில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களுமே இளம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. கடந்த மூன்று...
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரஞ்சித், ரஜினி...
யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (14.11.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விதை உருளைக்கிழங்குகளை வழங்கி உருளைக்கிழங்கு விநியோகத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து...
நாளை தொடக்கம் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ,மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய மின்னல் தாக்குதல் மற்றும் காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரில் காணப்படும் பாரிய குப்பைக்கூழங்கள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும்...
இலங்கை,சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஹாராரேவில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்பம் முதலே...
மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மையில் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகித்த வார்த்தைகள் மற்றும் அவரது செயற்பாடுகள் என்பன, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச நிலையை எடுத்துக்காட்டி நிற்கின்றதென குறிப்பிட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை...
இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள...
நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபட்டுவந்த யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்கள் இன்று முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாநகர சபையின் நுழைவாயிலை மறித்து அவர்கள் இன்றைய தினம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு...
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பிரதேத்தில் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இறந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்துள்ளவர் மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மல்லாவிப் பகுதியில் தனது வயலில் வேலைசெய்துகொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (62) என்ற விவசாயியே பலியாகியுள்ளார். இவரது சடலம்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முடிந்தால் தாய்ப்பாலுக்கும் அபராதம் அல்லது வரி விதிப்பார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் வரிச்சுமைய மக்கள் மீது சுமத்தியுள்ளதாக...
திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து, தன்னுடைய மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்துள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நிர்வாணக்கோலத்தில் மயக்கமடைந்திருந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அக்குடும்பத்தின்...
Loading posts...
All posts loaded
No more posts
