Ad Widget

யாழ் மாநகர சுகாதார ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்

நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபட்டுவந்த யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்கள் இன்று முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

muninci-strike

யாழ் மாநகர சபையின் நுழைவாயிலை மறித்து அவர்கள் இன்றைய தினம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

127 சுகாதார ஊழியர்கள் கடந்த ஏழாம் திகதி தொடக்கம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம் பல வருடங்களாக தொழில்புரிந்து வருவதாகவும், இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவரும் நிலையில், யாழ் மாநகரத்தில் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு இடங்களில் அகற்றப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகரத்தில் வசிக்கும் மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை யாழ் மாநகர சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் கிளிநொச்சி பிரதேச சபை ஊழியர்களும் இன்று ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Related Posts