வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திச் செய்ய நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தொழில் யாப்பில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று...

2878 இளைஞர் யுவதிகளுக்கு அரச முகாமைத்துவ உதவியாளர் தொழில் வாய்ப்பு

2878 இளைஞர் யுவதிகள் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக அடுத்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே இதுதொடர்பாக தகவல் தருகையில் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாக தெரிவத்தார். இவ்வருடத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் 1595...
Ad Widget

புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்ட இரு இளைஞர்கள் சாவகச்சேரி காவல்துறையில் சரண்!

பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர் சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர். மட்டுவில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களையும் இன்று(திங்கட்கிழமை) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் ஆவா குழு என அழைக்கப்படும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே...

தவராசாவை நீக்குமாறு கடிதம்?

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில்...

அடித்து துன்புறுத்தி நகைகள் கொள்ளை

உடுவில் டச்சுறோட் பகுதியில் உள்ள வீட்டுக்குள் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை அடித்து, துன்புறுத்தி நகைகளை நேற்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிகாலை வீட்டு முன்கதவினை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் படுத்திருந்த பெண் மீது முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தலையணையால் முகத்தினை அழுத்தி...

கீரிமலை கேணியில் முழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு சுபாஸ்கரன் வயது(38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். உறவினர் ஒருவரின் அந்தியெட்டி கிரியைகள் செய்வற்காக சென்ற மேற்படி நபர், கேணியில் நீராடச்சென்றிருந்தார். குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்தவர்கள் அவரை...

ஆவா குழு : மற்றுமொருவர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...

ட்ரம்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டொனல்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவின் புதிய...

கால்நடை மருத்துவ நடமாடும் சேவை கிளிநொச்சியில் நடைபெற்றது

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடைகளைச் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்...

யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற சுமார் 197 தொழிலாளர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் கோரி கடந்த 07ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து ஏனைய நிரந்தரப் பணியாளர்களும்...

விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்கு அரசாங்கம் சதி: ஐங்கரநேசன்

தமிழர்களின் விடுதலை உணர்வை இல்லாமல் செய்வதோடு, விடுதலை தொடர்பான எவ்வித கோரிக்கையும் தமிழர்களிடம் இருந்து ஒருமித்து வரக்கூடாது என்பதில் அரசாங்கம் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றதென, வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர்...

ஈழ போராட்டத்தில் மரணித்த போராளிகளை வவுனியாவில் நினைவுகூர ஏற்பாடு

ஈழ போராட்டத்தில் விடுதலைக்காய் மரணித்த அனைத்து போராளிகளையும் நினைவுகூரும் முகமாக, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வவுனியாவில் நினைவு தினமொன்றை அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு, ஈரோஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகள், உறுப்பினர்களை உள்வாங்கல்,...

இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக் கூடாது ; விஜயகலா

நல்லாட்சி அரசாங்கம் ஓரிரு இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக்கூடாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து நல்லாட்சியை முடக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் எதிர்கட்சியினர் தமது தனிப்பட்ட தேவைக்காக மக்களை வீதியில் இறக்குவதற்கு முஸ்தீபுகளை மேற்கொள்வதாகவும், இவற்றுக்கு...

முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று...

திருவாசகம் சிங்களத்தில்! நல்லூரில் வெளியீடு!

சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின்கீழ் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் என்பவனவற்றிலேயே குறித்த பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் 203 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய...

மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...

தமிழர்கள் அனைவரும் புலிகளே!

தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை...

யாழ் நகரில் சுகாதார சீர்கேடு

யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருவதால் தற்போது யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றது. குறிப்பாக யாழ் நகரப் பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள், துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்காடி வியாபாரிகளின் கழிவுப் பொருட்கள், ஏனைய கடைகளின் கழிவுப் பொருட்கள் அங்காங்கே தேங்கி காணப்படுகின்றன. எனவே...

யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கை கோர்ப்பு எனும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இனங்களிற்கிடையில் புரிந்துணர்வை...
Loading posts...

All posts loaded

No more posts