ஈழ போராட்டத்தில் மரணித்த போராளிகளை வவுனியாவில் நினைவுகூர ஏற்பாடு

ஈழ போராட்டத்தில் விடுதலைக்காய் மரணித்த அனைத்து போராளிகளையும் நினைவுகூரும் முகமாக, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வவுனியாவில் நினைவு தினமொன்றை அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்தோடு, ஈரோஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகள், உறுப்பினர்களை உள்வாங்கல், மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல்கொடுப்பது போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஈரோஸ் கட்சியின் தலைவர் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் தற்போதைய செயற்பாட்டாளாகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts