இலங்கையிலேயே தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம்!

இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 – ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. Read more »

அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கு ௭வ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்காகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அனைத்து காய்நகர்த்தல்களையும் முன்னெடுக்கின்றார்.என அவ் இயக்கத்தின் பொதுச் செயலாளர்... Read more »

27ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்

முஸ்லிம்களின் ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி எதிர்வரும் 27ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. Read more »

கிணறுகளுக்கு வரி

புதிதாக சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். Read more »

கோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் உயர்வு

யாழ். மாவட்டத்தில் பிறிமா கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிறிமா கோதுமை மா நேற்றுமுன்தினம் முதல் 85ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. Read more »

கோத்தாவுக்கு எதிராக மாதகல் பொதுமக்கள் உயர் நீதிமன்றில் மனு!

வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். Read more »

வட மாகாண சபையின் கருத்தை ஆளுநர் வெளியிட முடியுமா? ஒக்டோபர் 22 இல் பரிசீலனை

கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வட மாகாண சபையின் ஆளுனரால் வெளியிடப்படும் கருத்துகள் அந்த மாகாண சபையினால் வெளியிடப்படும் உண்மையான கருத்துகளாகுமா என்பது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் பரிசீலனைக்கு எடுக்கும். Read more »

நல்லூர் பிரதேச சபை தலைவர் வசந்தகுமார் மீது தாக்குதல்

நல்லூர் பிரதேச சபையின் தலைவர் எஸ்.வசந்தகுமார் மீது சற்று முன்னர் இனம்தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more »

தோல்வியில் முடிவடைந்த பல்கலைக்கழங்கள் ஆசிரியர் போராட்டம். இன்றுமுதல் கடமைக்கு திரும்புகின்றனர்!

இன்று பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளபோதிலும், சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்மொழிவுகள் போதியவையல்லவெனவும் அரசாங்கம் தமது மனத்தாங்கல்களை கவனிக்கும்வரை அதன் போராட்டம் தொடருமெனவும் பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. Read more »

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதமர்! அழுத்தம் கொடுக்குமாறு எம்.பிக்கள் ௭டுத்துரைப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்மைப்பு இடம்பெற்றால் ஏமாற்றப்படுவது உறுதியாகும். Read more »

இராணுவத்தின் தனியார் காணி சுவீகரிப்பு விடயம் ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்

பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். Read more »

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணம்: அமைச்சர் ஜி.எல் புகழாரம்

‘யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது’ என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். Read more »

தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்தில் தீ விபத்து

யாழ். சட்டநாதர் கோயிலுக்கு அருகிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்திலுள்ள மின்னிணைப்பில் இன்று வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக யாழ். மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more »

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று கைவிடப்படலாம் உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை கைவிடப்படலாம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more »

யாழ்ப்பாணத்தில் தீவிரமாகப் பரவுகிறது டெங்கு: கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்

யாழ். மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக குருநகர், தெல்லிப்பளை, கொக்குவில் போன்ற பகுதிகளில் தீவரமான டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இவற்றில் குருநகர், தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களில் சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபை, பொதுமக்கள், ஏனைய நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினால்... Read more »

‘அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்’ -ரஞ்சித் தேவசிறி

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து புதன்கிழமை வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்குமென கூறியுள்ளது. Read more »

காரசாரமான விவாதங்களுடன் களைகட்டிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்!

யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது. Read more »

கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி! மனமுடைந்த இரு இளைஞர்கள் தற்கொலை!

ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட பொழுதிலும், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு... Read more »

ஐ.சி.சி டுவென்டி டுவென்டியில் மேற்கிந்திய தீவுகள் சம்பியன்

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது இலங்கை அணியைத் தோற்கடித்து உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களாகத் தெரிவானது. Read more »

பல்கலை விரிவுரையாளர்களது பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று இறுதி முடிவு

பகிஸ்கரிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலமாக நீடித்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினமே இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக விரிவுரையாளர்... Read more »