Ad Widget

விளக்கேற்றி சுதந்திரத்தைக் கொண்டாடவும்

தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினமான நாளை புதன்கிழமை இரவு 9.30 மணிக்கும் 9.34க்கும் இடையான காலப்பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளக்கொன்றை ஏற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒன்றாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திர நாடொன்றை கிடைக்க பிரார்த்திப்போம் என்று வேண்டிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றுமாறு...

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு...
Ad Widget

யாழ் மாவட்டத்தில் முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சேதன விவசாயச் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில்...

போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், வடமாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்துக்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 2015 இல் பரீட்சைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வி்ண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி பெப்ரவரி 25 ஆகும்.

போராளிகள், அவர்களின் குடும்பங்களுக்கான விண்ணப்ப படிவங்கள்

வடமாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி அந்தந்த பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது...

ஓமந்தையில் சோதனைகள் நீங்கியது

ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சோதனை நடவடிக்கைகளும் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழு மோதலில் ஈடுபட்ட அறுவர் கைது

யாழ்ப்பாணம், மல்லாகம், நரியிட்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) குழு மோதலில் ஈடுபட்ட அறுவரைக் கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி தெற்குப் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மல்லாகம் நரியிட்டான் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 6 பேரைக் கைது செய்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இவர், மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். மருதடி பிள்ளையார் ஆலயத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வடக்குக்கான விஜயம் பற்றி வினவியபோது 'ஆலய வழிபாட்டுக்காகவே...

நெடுந்தீவில் குதிரைகள் சரணாலயம்

நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர்...

திஸ்ஸ அத்தநாயக்க கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த ஜனாதிபதி...

புதிய அரசே காணாமல் போன உறவுகள் தொடர்பில் பதில் கூறு!

புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள...

ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை!

வடக்கு மாகாண ஆளுநராக பளிஹக்கார இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் ஊடகவியலளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். சாதரண நிகழ்வாகவே பதவியேற்பு இடம்பெறுவதன் காரணமாக இந்த நிகழ்வுக்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனராம். இந்தநிலையில்...

கௌரவ , அதிமேதகு என்ற வார்த்தைகளை எனக்கு பயன்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி

இனிமேல் என்னை அழைக்கும் போது கௌரவ , அதிமேதகு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனது பெயரை குறிப்பிடும் போது அடைமொழியாக அதிமேதகு ஜனாதிபதி என்று அழைப்பதோ அத்துடன் எனது மனைவியின் பெயரை குறிப்பிடும் போது முதற்பெண்மணி என அழைப்பதோ தடை செய்யப்பட வேண்டும். அரச ஊடகங்கள்...

யாழில் மணல் விலை அதிகரிப்பு

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் அகழ்வுக்கு பருத்தித்துறை பொலிஸாரால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தமையால், யாழ். மாவட்டத்தில் மணலின் விலை அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு கியூப் (4 உழவு இயந்திரங்கள்) மணல் 17 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சந்தை நிலைவரத்தின்படி ஒரு கியூப் 23,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. மணல் அகழ்வு...

ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இரண்டு வருடகால பயிற்சியையும் நிறைவு செய்த கோப்பாய் ஆசிரியர் கலாசாலையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) கலாசாலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் நடைபெறலுள்ளது. இரண்டு வருட கால பயிற்சியை நிறைவு செய்து இறுதிப் பரீட்சையில் தோற்றிய 458 ஆசிரியர்களில் சித்தியடைந்த 448 பேருக்கு இந்த சான்றிதழ்கள்...

வடமாகாண கல்வி அபிவித்திச் சபையை கலைக்கவும்

அரசியல் கட்சி ரீதியில் செயற்பட்ட வடமாகாண கல்வி அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தி அதனை கலைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசேப் ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தலைவர் ஞாயிற்றுக்கிழமை (01) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்வி அபிவிருத்திச் சபை என்ற அமைப்பு வேறு எந்த மாகாணத்திலும்...

சிற்றுண்டிச்சாலைகளிலும் விலை குறைப்பு

சிற்றுண்டிச்சாலைகளிலும் இன்று (02) திங்கட்கிழமை முதல் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. பிளேன் ரீ ஒன்றின் விலை 10 ரூபாவாகும். ரீ 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. அப்பத்தின் நிர்ணயவிலை 10 ரூபாவாகும். திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியல் அனைத்தும் சிற்றுண்டிச்சாலைகளிலும் வைக்கப்பட...

நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறல்

நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும். இதனை நிவர்த்தி செய்யும் பட்சத்தில், நியமனங்கள் பெறுபவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக்கொடுத்தமைக்கு சுமந்திரனை பாராட்டி நாவலர்...

ஐ.நா விசாரணையில் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் – மாவை

ஐ.நா. சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். சுமந்திரனின் பாராட்டுவிழா நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற போதே, அதில் கலந்துகொண்ட மாவை, நிகழ்வு முடிந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்...

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய நிறுவனத்திடம் விசாரணை

இலங்கையில் தெற்கு கடலில் பெருந்தொகை ஆயுதங்களுடன் தடுத்துவைக்கப்பட்ட கப்பலை நிர்வகித்துவந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 10 நாட்களில் தெற்கே, காலி துறைமுகத்தில் பெருந்தொகை ஆயுதங்களுடன் கப்பலொன்று தடுத்துவைக்கப்பட்டிருந்தது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தக் கப்பலில் 12 பெரிய கொள்கலன்களில் பெருந்தொகை ஆயுதங்கள் இருந்ததாக...
Loading posts...

All posts loaded

No more posts