Ad Widget

கௌரவ , அதிமேதகு என்ற வார்த்தைகளை எனக்கு பயன்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி

இனிமேல் என்னை அழைக்கும் போது கௌரவ , அதிமேதகு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithripala-sirisena

எனது பெயரை குறிப்பிடும் போது அடைமொழியாக அதிமேதகு ஜனாதிபதி என்று அழைப்பதோ அத்துடன் எனது மனைவியின் பெயரை குறிப்பிடும் போது முதற்பெண்மணி என அழைப்பதோ தடை செய்யப்பட வேண்டும்.

அரச ஊடகங்கள் அமைப்பின் பேட்டி நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கடந்த சனிக்கிழமை (31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகிய நான் திரு. மைத்திரிபால சிறிசேன எனவும் அவருடைய மனைவி திருமதி மைத்திரிபால சிறிசேன எனவுமே அழைக்கப்பட வேண்டும், நாட்டைச் சுற்றிலும் பல ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நாட்டில் இடம்பெறும் அரச நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் ​கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை தான் பயன்படுத்த போவதில்லை என்றும் மற்றைய மாகாணங்களிலுள்ள ஜனாதிபதி இல்லங்களும் அங்காங்கு இடம்பெறும் அரச நிகழ்வுகளின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதியின் தேவையின் பொருட்டு அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை மட்டுமே தான் பயன்படுத்தவுள்ளதாகவும் அவற்றிலும் குடியுரிமை செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஜக்கிய தேசியக்கட்சியும் இணைந்து போட்டியிடவுள்ளன. அடுத்து வரும் பொதுத்தேர்தல் முடிவில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற புதிய கொள்கை எட்டப்பட்டு அதனூடாக இந்நாட்டில் ஆட்சி நிலவும். இதன் மூலம் இலங்கை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னைய ஜனாதிபதியின் தனிப்பட்ட தேவைகளுக்காக புதிய விமானம் ஒன்று பல மில்லியன் தொகையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் தற்போது சிறிலங்கன் எயர் லைன்ஸ்க்கும் மிகின் லங்கா க்கு தேவையான விமான உதிரி பாகங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. சிறிலங்கா எயர் லைன்ஸ் சேவையும் மிகின் லங்கா சேவையும் ஒன்றாக இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த விமானம் சுமார் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதும் அவற்றுக்குரிய நிதி திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இடம்பெறவிருந்த கொள்வனவுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் நாட்டில் இடம்பெறும் தேசிய நிகழ்வுகளின் போது ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு பாடசாலை மாணவர்களை நீண்ட நேரம் வெயிலில் வைத்து அவர்களது கஷ்டத்துக்கு மத்தியில் எனக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிகள் வேண்டாம். பாடசாலை மாணவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். அத்துடன் ஜனாதிபதியாகிய நான் உத்தியோக பூர்வ தேவைகள் அன்றி வேறு எந்த தனிப்பட்ட தேவைகளுக்காகவும் கெலிகொப்டர்ஸ் பயன்படுத்த மாட்டேன். அத்துடன் எனது குடும்ப உறுப்பினர்களான மனைவியோ பிள்ளைகளோ என்னுடன் அன்றி தனித்து அரச சேவை கெலிகொப்டர்களில் பயணிக்க அனுமதிக்க மாட்டேன்.

என பலவிதமான கருத்துக்களை அரச ஊடகங்கள் அமைப்பின் பேட்டி நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

Related Posts