Ad Widget

யாழில் மணல் விலை அதிகரிப்பு

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மணல் அகழ்வுக்கு பருத்தித்துறை பொலிஸாரால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தமையால், யாழ். மாவட்டத்தில் மணலின் விலை அதிகரித்துள்ளது.

முன்னர் ஒரு கியூப் (4 உழவு இயந்திரங்கள்) மணல் 17 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சந்தை நிலைவரத்தின்படி ஒரு கியூப் 23,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டமையால் நேடியாகவும், மறைமுகமாகவும் 9,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணலின் விலை அதிகரித்தமையின் காரணமாக வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டடப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழுள்ள மகேஸ்வரி நிதியம், முறையற்ற அனுமதிப்பத்திரத்தின் மூலம் மணல் அகழ்ந்ததாகக்கூறி கடந்த 16ஆம் திகதி, பருத்தித்துறை பொலிஸார் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts