பஸ் கட்டணங்கள் இலத்திரனியல் அட்டைகளில்

பஸ்களில் இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தலுக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவிலிருந்து அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து நேற்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர் 1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா - தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு,...
Ad Widget

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....

மாமனிதர் தராகிசிவராம் 12 ஆம் ஆண்டுநினைவேந்தல்

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதியின் கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடை பெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில்...

எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே பண்ணையை விட்டு வெளியேறலாம் என்று இராணுவம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல்...

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கம்

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்பகுதியில் இருந்துவரும் பேரூந்துகள் அனைத்தும் வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரி, அதற்கான...

அவுஸ்ரேலியாவில் இருந்து யாழ் வந்த நபரை வெள்ளை வானில் கடத்தி சித்திரவதை!

அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் தெரியவருவதாவது... குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக...

காக்கைதீவுப் பகுதியில் மாடுகளின் கொல்கலன் கழிவுகள் கொட்டப்படுவதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இந்தக் கழிவுகள் மதகுடன் கொட்டப்பட்டுள்ளன. இப்பகுதியானது,...

சிவனொளிபாதமலையில் பதற்றம்: புத்தர் சிலையை வைக்க சிங்ஹலே முயற்சி

சிங்ஹலே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹலே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை...

சுமந்திரன் மீதான கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது...

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தந்தை...

கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை

கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை குறைப்பது மற்றும் மாணவர்கள் அதிகமாக தண்ணீர்...

ஜோதிகா வேண்டுகோள், சூர்யா ஏற்பாரா?

36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்,” என திரைப்பட...

குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான...

`வேலைக்காரன்’ படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ்...

தமிழர் தாயகமெங்கும் கருக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தாயகம் தழுவிய மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும் : தமிழ் மக்கள் பேரவை

பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை...

வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு போராடும் மக்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது...

27ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த முடிவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள்...

ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தக சங்கம் முழுமையான ஆதரவு

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார். வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக சங்க நிர்வாக கூட்டம் நேற்ற (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts