- Tuesday
- June 16th, 2026
எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்களுடைய...
வெளிநாட்டு முகவர் ஒருவரினால் புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஈரான் எல்லைப்பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கில் முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்டிருக்கின்றனர். வெவ்வேறு...
மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். “திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரட்ண டில்ஷானைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (25) இரத்துச் செய்தது. தனது முந்தைய மனைவியான நிலங்கா விதாங்கிக்கு மாதாந்தப் பராமரிப்புப் பணமாக 20,000 ரூபாயையும் தனது மகனுக்கான காப்புறுதிப் பணத்தையும் டில்ஷான் செலுத்தி வந்தார். அந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமாக,...
நாட்டில் நிலவுகின்ற ஆகக்கூடிய வெப்பம் காரணமாக, ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகையால், பிள்ளைகளை தண்ணீரில் விளையாட விடுமாறும் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வெப்ப அதிர்ச்சி நிலைமையை இல்லாமற்செய்வதற்கு, தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கவும் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுரை கூறியுள்ளார். விசேடமாக, சின்னப்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழமையான வெப்ப நிலையை விட அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது ஏனைய பிரதேசங்களில் வழமையை விட 3 செல்சியஸ் அதிகளவிலாக வெப்பநிலை நிலவுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் தற்சமயம் 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மேலும் 3 செல்சியசினால்...
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு,...
இலங்கை, மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக மலேரியா தினம் நேற்று ஏப்ரல் 25ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும்...
தமிழ் சினிமா எம் ஜி ஆர், சிவாஜி என்கிற இரு ஆளுமைகள் நடித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கென்று ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள். அதைத் தாண்டி தங்களுக்கு பாராட்டு விழா நடத்தவோ, பட்டங்கள் வேண்டியோ மத்திய மாநில அரசுகளிடம் மனு கொடுத்ததில்லை. இதற்காக திரையுலகின் சங்கங்கள், அமைப்புகளை தங்கள் வசதிக்கு வளைத்துக் கொண்டதுமில்லை. வாரக் கடைசியில் சொந்த...
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாத காரணத்தால் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் ,...
மக்களின் உரித்துக்களுக்கான – உரிமைக்கான போராட்டங்கள் என்றும் வெற்றி பெற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தேடுகின்ற நீண்ட – நெடிய போராட்டத்தை, கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்கின்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு அகில இலங்கை அரச பொது...
நாடாளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாடசாலை சுற்றுச்...
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கங்களின் அழைப்பின்பேரில் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள இப் போராட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இப்படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி...
இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த யாராவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடுவதாக இருந்தால், தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின்...
எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது எனவும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி நேற்று (திங்கட்கிழமை)...
ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய...
போத்தல்களில் பெற்றோல் விற்ற இருவருக்கு மல்லாகம் நீதவான், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தார். பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்....
Loading posts...
All posts loaded
No more posts
