Ad Widget

கடையடைப்புப் போராட்டத்துக்கு அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கமும் ஆதரவு!

மக்­க­ளின் உரித்­துக்­க­ளுக்­கான – உரி­மைக்­கான போராட்­டங்­கள் என்­றும் வெற்றி பெற வேண்­டும். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள், தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைத் தேடு­கின்ற நீண்ட – நெடிய போராட்­டத்தை, கடந்த இரண்டு மாதங்­க­ளா­கத் தொடர்­கின்­ற­னர்.

அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில் அவர்­கள் நடத்­தும் கடை­ய­டைப்புப் போராட்­டத்­துக்கு நாம் எமது ஆத­ர­வைத் தெரி­விக்­கின்­றோம். இவ்­வாறு அகில இலங்கை அரச பொது ஊழி­யர் சங்­கத்­தின் தலை­வர் எஸ்.லோக­நா­தன் தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது,

இரண்டு மாதங்­க­ளாகத் தொடர்ச்­சி­யா­கப் போராட்­டம் நடத்­தும் அவர்­களை அரசு ஏறெ­டுத்­தும் பார்க்­க­வில்லை. கடை­ய­டைப்பு மூல­மாக கொடுக்­கப்­ப­டும் மேல­திக அழுத்­தத்­தின் ஊடாக, அரசு அவர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டும் – என்­றார்.

27ம் திகதி பூரண ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் அமையவேண்டும்: சம்பந்தன்

Related Posts