Ad Widget

வடக்கு கிழக்கில் அதிகளவிலான வெப்பநிலை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழமையான வெப்ப நிலையை விட அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இம்முறை வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது

ஏனைய பிரதேசங்களில் வழமையை விட 3 செல்சியஸ் அதிகளவிலாக வெப்பநிலை நிலவுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் தற்சமயம் 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

மேலும் 3 செல்சியசினால் அதிகரிக்குமாயின் மக்களால் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

அடுத்த மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.. சுற்றாடல் மாசடைதல், வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளமையும் இதற்கான பிரதான காரணங்களாகும். நாட்டில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையினால் மென்மையான ஆடைகளை பயன்படுத்துவது பொருத்தமாகும்.
நுவரெலிய நகரில் வெப்பநிலை 23 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.

Related Posts