இந்தியாவிலிருந்து அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து நேற்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்

1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா – தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சோந்தவர்களே, இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

Related Posts