“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் எனது பிள்ளையை பேருந்தில் ஏற்றியதைக் கண்டேன்”: தாயொருவர் சாட்சியம்

“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு...

இழந்த அதிகாரங்களை பெறுவதற்கு சுயநலவாதிகள் சதி: சம்பந்தன் குற்றச்சாட்டு

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

வேலையில்லா பட்டதாரிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்?

நீதிமன்றக் கட்டளையை அவமதித்தவர்களை, உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி, சட்டத்தரணிகள் பலர், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக, நேற்று காலை கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள், திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளை அடங்கிய ஆவணத்தை, பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன், அதனைக் கிழித்து, காலால் மிதித்தமையை கண்டித்தே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு...

160 தொழிற்சங்கங்கள் இணைந்து ​​வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு

வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கள் பல ஒன்றாக இணைந்து ​வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மே மாதம் 3,4,5 ஆகிய ஏதாவதொரு நாளில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 160 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று...

மே தினத்தில் ட்ரான்பேரன்ஸி நிறுவனம் விடுக்கும் வேண்டுகோள்

மே தினத்தைக் கொண்டாடும் சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தவிரத்துகொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாரிய அளவிலான பேரூந்துகள் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நாடளாவிய ரீதியில் மே தின ஊர்வலத்திற்கென ஆதரவாளர்களை குவிப்பதற்காக முற்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக...

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி வெற்றிடம் : தமிழ் மொழி பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை

இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்­டபிள் / பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் / பொலிஸ் கான்ஸ்­டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்பிரகாரம், விண்­ணப்­பிக்கும் பத­வியை குறிப்­பிட்டு பதி­வுத்­த­பாலில் 2017.06.02 ஆம் திக­திக்கு அல்­லது அதற்கு முன்­ப­தாக விண்­ணப்­பப்­ப­டி­வங்­கள் கிடைக்கக்கூடியதாக அனுப்­பப்­படல் வேண்டும். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தமிழ்...

வாட்டும் வெயிலில் சிறுகுழந்தைகளுடன் யாசகம் கேட்கும் பெண்கள்

யாழ்ப்பாணம் கைதடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால், இளம் வயதுடைய இரு பெண்கள், கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, அப்பெண்கள் வீதியில் நின்று யாசகம் கேட்டு வருகின்றனர். ஏ-9 வீதியில் பயணிப்போர் குறித்த...

சுன்னாகம் இளைஞன் கொலை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு

சுன்னாகம் பொலிஸாரால் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொகுப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார். வட, கிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால்...

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் விடுதலை!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...

அஜித் படத்தில் மகாபாரத பீஷ்மர் ஆரவ் செளத்ரி

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இதில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கிய வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படம் இந்தி சினிமா ரசிகர்களையும் கருத்தில் கொண்டு தயாராகி வருவதால், விவேக் ஓபராய்க்கும் அதிக முக்கியத்துவம்...

மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக்கேட்கும் விஜய்!

தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய். இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது...

வடக்கில் 10 பிரதேச செயலர்களுக்கு உடனடி இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பத்து பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் 6 பிரதேச செயலர்களுக்கும், மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 4 பிரதேச செயலர்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன்!

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சங்காவிடம் சச்சின் கேட்டது என்ன ?

தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பிறந்ததின பரிசொன்றை சச்சின் கேட்டுள்ளார். கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கார் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்கார டுவிட்டரில் சச்சினுக்கு...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி

நேற்றய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் நேற்ற வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து...

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றி: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலை மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் தாயக பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு,ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் சம்பந்தன் பிரேரணை!

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று இடம்பெறவுள்ளது. மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தோருக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பாரிய...

ஜனாதிபதி சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கபட்டுள்ளார். சட்டத்தரணிகளான விவேகாநந்தன் புவிதரன், எம். நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில்...

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேக நபரை தொடர்ந்து விசாரிக்க அனுமதி

பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், சந்தேகநரின் விளக்கமறியலை எதிர்வரும் 5ஆம் திகதிவரை நீடிப்பதாகவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தனது வீட்டில்...

A9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக நேற்றம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி...
Loading posts...

All posts loaded

No more posts