Ad Widget

“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் எனது பிள்ளையை பேருந்தில் ஏற்றியதைக் கண்டேன்”: தாயொருவர் சாட்சியம்

“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “அரசாங்கத்தினை நம்பியே நாங்கள் எங்களது பிள்ளைகளை முள்ளிவாய்க்காலில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தோம். இதுவரையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

எமது பிள்ளைகளை நாங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டதாக ஒருசிலர் தவறான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு அப்படி எமது பிள்ளைகளை ஒழித்து வைக்க வேண்டிய தேவையில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts