Ad Widget

மே தினத்தில் ட்ரான்பேரன்ஸி நிறுவனம் விடுக்கும் வேண்டுகோள்

மே தினத்தைக் கொண்டாடும் சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தவிரத்துகொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாரிய அளவிலான பேரூந்துகள் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நாடளாவிய ரீதியில் மே தின ஊர்வலத்திற்கென ஆதரவாளர்களை குவிப்பதற்காக முற்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவ்வாறான எந்தவொரு பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தலானது உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்கள் மே தின கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்கின்ற அரசியல் ஸ்தாபனங்களுக்கு மாத்திரமன்றி அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைதல் வேண்டும்.

1982ம் ஆண்டு 12 ஆம் இலக்க பொதுச் சொத்துக்கள் சட்டத்திற்கு எதிரான குற்றங்களை ஏற்பாட்டாளர்கள் புரிந்துகொண்டு இயங்க வேண்டுமென ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தெரிவிக்கின்றது.

இதேவேளை இந்த முறை கொழும்பு மற்றும் அண்மித்த பிரதேசங்களில் 15 மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வு கெம்பல் மைதானத்திலும், கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 07 அரசியல் கட்சிகள் பங்கேற்கும் மே தின நிகழ்வு காலி முகத்திடலிலும் இடம்பெற உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வுகள் பீ.ஆர.சீ. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இது தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின நிகழ்வுகள் கண்டி, கெடம்பே மைதானத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts