Ad Widget

வடக்கில் 10 பிரதேச செயலர்களுக்கு உடனடி இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பத்து பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் 6 பிரதேச செயலர்களுக்கும், மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 4 பிரதேச செயலர்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதே மாவட்டங்களுக்குள் இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நேற்று எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts