Ad Widget

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கம்

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்பகுதியில் இருந்துவரும் பேரூந்துகள் அனைத்தும் வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரி, அதற்கான நீதி வேண்டி நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கடையடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதை தவிர்க்கவுள்ளனர்.

எனவே, வடமாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதுடன், தென்பகுதியில் இருந்துவரும் பேரூந்துகளும் வவுனியாவுடன் மட்டுப்படுத்துமா? எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகளுக்கு இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்காக வருந்துவதுடன், தமிழ் மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பிராந்திய தொழிற்சங்கமும் நாளை சேவையில் தாம் ஈடுபடத் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts