Ad Widget

`வேலைக்காரன்’ படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் தேதியும், படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29)-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள, நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை `கபாலி’ பட பாணியில் நடத்த மோகன் ராஜா முடிவு செய்துள்ளார். அதற்காக, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts