யாழ். மாவட்டத்தில் 4,104 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்த 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். “இணையம் ஊடாக 3 ஆயிரத்து 425 பேர் பதிவு செய்திருந்தனர்....

இலங்கை மக்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில், மக்களுக்கு விசேட எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள,...
Ad Widget

பழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்?

ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான சமாதான நீதவான் கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, “எனது காணிக்குள் மிகவும்...

யாழில் 15 வயது சிறுமி கடத்தல்!

முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி – பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது. சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கினார். அக்காணியில் நிலமட்டத்திலிருந்து சுமார் 35 அடி கீழ்நோக்கிச்...

பிரபாகரனின் அரசியலில் ஜனநாயகத் தன்மை இருந்தது: சிவஞானம்

ஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சமாந்தரமான முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்றும் அவர் தன்னிடம் கூறியிருந்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர்...

இளைஞர் மாநாடு நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவையினர் ஏற்பாடு!

எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழர் தாயகத்தின் முன்னேற்றத்தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது....

இரணைதீவிற்குள் மக்கள் அனுமதி!

கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர். எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லை. இதனையடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ந்ததோடு, அங்கு காணப்படும் தமது கட்டங்கள், மரங்கள் என்பவற்றை ஆரத் தழுவியுள்ளனர். இரணைதீவை விடுவிக்க...

யாழ். மாநகரின் கழிவகற்றலை சிங்கள தனியார் நிறுவனத்திடம் வழங்கத் தீர்மானம் என்ற செய்திக்கு முதல்வர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாநகரின் திண்மக் கழிவகற்றல் பணிகளை தென்னிலங்கை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் நிராகரித்துள்ளார். “யாழ்.மாநகர சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எடுக்கமாட்டேன். அத்தோடு இந்த விடயத்தைச் செய்வதாயின் சபையின் ஒப்புதல் பெறப்படவேண்டும். தன்னிச்சையாக என்னால் செய்யக் கூடிய விடயம் இதுவல்ல. எனவே...

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் – வட மாகாண ஆளுநர்

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் நேற்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும்...

யாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு ??

யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில்...

ஓட்டோ சாரதிகளுக்காக வருகிறது புதிய சட்டம்

இலங்கையில் ஓட்டோ வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்காக புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கு அமைய, பயணிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தும் சாரதிகளின் வயதெல்லை 35 இற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கபடவுள்ளது. இந்த சட்ட திட்டத்தினை மீறும் ஓட்டோ சாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம்: அரசாங்கத்திற்கு சுமந்திரன் காலக்கெடு!

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,...

தடைகளைத் தாண்டி யாழில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...

வவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர்!

மயக்க நிலையில் 18 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இருந்தே மேற்படி இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே சுவாச கோளாறு காரணமாக மயக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாகவே பெருமளவு நீர் இழக்கபட்டு மயக்கநிலை அடைந்ததாக வைத்தியசாலை...

சுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இணைய விரும்பினால் அதனை பரிசீலிக்கத் தயார்...

பெற்றோல்- சமையல் எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு எதிர்க் கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது இவர் மேலும்...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை!!!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபை தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியை அமைக்க விரும்பினால் அமைக்கலாம். இச்செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காதென,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...

அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில்...

தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா

தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கமும் நீதிமன்றங்களும் தயக்கம் காட்டி வருகின்றன எனவும் அந்த அறிக்கையில்...
Loading posts...

All posts loaded

No more posts