- Friday
- May 15th, 2026
சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மினி சூறாவளியால் மாங்குளம், துணுக்காய் வீதியில் அமைந்துள்ள சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சிறிதளவு...
யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அதன் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதன்போது தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ். மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்...
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை. இந்நிலையில், ஆளுநரின் அறிவிப்புகள், சபை அறிவிப்புகள், அறிக்கைகள் என்பன மாத்திரம் இடம்பெற்று சபை...
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் நேற்றயதினம் காலை கைது செய்யப்பட்டார் என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் வெடிமருந்தை எதற்காகக் கொண்டு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வெடிபொருள்களிலிருந்து அவற்றை சந்தேகநபர் பெற்றுக்கொண்டாரா? என்ற...
இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்திடம் [ITJP] சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பான அதிர்ச்சி நிறைந்த அறிக்கை ஒன்றை...
சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். தென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வெளிக்களப்பணியில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் வைத்து அங்கிருந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 1.05.2018 அன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். இடம் :- கிட்டு பூங்கா...
வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளூர் பத்திரிகை ஒன்று அண்மையில் வெளியிட்டது. அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் பணியாற்றும் இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற இரு தரப்பினருக்கு இடையேயான மோதலின் போதே இரகசிய பொலிஸ் உத்தியோக்கத்தரான யாபா காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை ரூபாவின் இந்த பெறுமதி வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதுடன்,...
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அடுத்த மாதம்...
அனைத்து பட்டதாரிகளுக்கும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டது போல் பட்ட இறுதிச் சான்றிதழ் அடிப்படையில் நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (24.04.2018) செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும் என அாசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பட்டதாரிகளுக்கு மேற்கொள்ளப்படும்...
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி...
யாழ். இணுவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியினால் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் வேம்பு மற்றும் இதர நிழல் தரும் மரங்களை எதிர்காலத்தில் நாட்ட அவர்கள் எண்ணியுள்ளனர். இந்த...
யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி, மாணவி வித்தியாவின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை, அக்குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட...
கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது. விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு பிரிவுகள் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் என்பன இயங்கி வருவதுடன், தனியார் துறையின் கீழ்...
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழாவில், சிறப்பு அதிதியாக...
ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும்...
Loading posts...
All posts loaded
No more posts
