Ad Widget

அனைவருக்கும் நியமனம் வேண்டும் – பட்டதாரிகள் போராட்டம்

அனைத்து பட்டதாரிகளுக்கும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டது போல் பட்ட இறுதிச் சான்றிதழ் அடிப்படையில் நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (24.04.2018) செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும் என அாசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பட்டதாரிகளுக்கு மேற்கொள்ளப்படும் நேர்முகத் தேர்வு புள்ளியிடல் முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

* வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவதற்கான செயற்பாடுகளில் நல்லாட்சி அரசு ஈடுபடுவதனை வரவேற்கிறோம்.

*அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்

*கடந்த கால அரசாங்கங்கள் போல் பட்ட இறுதித் திகதியின் படி நியமனங்களை வழங்குதல் வேண்டும்

*யுத்தத்தால் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பாடசாலை சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களை கொண்டு புள்ளிதிட்டங்கள் வழங்குதல் பொருத்தமற்ற வழிமுறை ஆகும்.

*முறையற்ற சான்றிதழ்கள் ( தவறான வழியில் பெற்ற) பல மாகாணங்களிலும் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

*நல்லாட்சி அரசு பட்ட இறுதித் திகதியினை கருத்தில் கொண்டு அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை வழங்காது விட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் – என தெரிவிக்கப்பட்டது.

Related Posts