- Friday
- May 15th, 2026
ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் தீர்வொன்றினை வழங்குவதற்கு இந்த ஆண்டுக்குள் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு...
இரணைதீவு மக்கள் 26 வருடங்களின் பின் தமது சொந்த மண்ணில் தொழிலாளர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளனர். தமது பூர்வீக மண்ணில் விசேட வழிபாடுகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரணைதீவு மக்கள் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது நீச்சல், படகோட்டம், கிடுகு பின்னுதல், மட்டிபொறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் இரணைதீவு மக்கள் ஈடுபட்டதுடன், அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்....
காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில், முன்னால் பவனி வந்த பிள்ளையார் தேர் குடை சாய்ந்தது. மழை பெய்த ஈரலிப்பால் நிலத்தில் காணப்பட்ட சகதிநிலை காரணமாக பள்ளம் ஒன்றுக்குள் தேர்ச் சில்லும் புதையுண்டு தேர் குடை சாய்ந்ததாக ஆலயத்தினர் தெரிவித்தனர். இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்த்திருவிழா...
சமையல் எரிவாயுவின் விலை நேற்று (27) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அதன் விநியோகஸ்தர்களாக லிப்ரோ மற்றும் லாவ்ப் காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 1431...
நடைபெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட திரு.மகேந்திரலிங்கம் கபிலனுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி...
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். அத்துடன், அவை தொடர்பில் முதல்வர் தரப்பு நியாயங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள உப குழுக்கள் நியமிக்கப்படாதை தொடர்பான குற்றச்சாட்டு ஏற்றக் கொள்ள...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டினை விடவும் 2017ம் ஆண்டில் 124 பேரினால் அதிகரித்த தன்மையே கானப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரிற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபடுபவர்களின் எண்ணிக்கை பெரும் பிரச்சணையாகவே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையினை...
யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரி முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , யாழ் மாநகர சபையின் சகல...
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகள் நாளை 2018.04.29. முதல் 2018.05.01 வரையில் யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக புனித தாதுக்களை காட்சிப்படுத்தல், வெளிச்சகக் கூடுகளை காட்சிப்படுத்தல், பக்திப்பாடல்களை இசைத்தல் மற்றும் மூன்று...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது குறித்த கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது...
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு பேர் மதுபோதையில் நின்றுள்ளதுடன், கைகளால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததுடன்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை ஈ.பி.டி.பி முதலில் அவற்றை வெளியிடட்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி ஒரு பெரிய கட்சி அல்ல” இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்தில்...
“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய...
கொக்குவில் முதலி கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களாக இராட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே சுமந்திரன்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற...
வவுனியா நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணொருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
உலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் அதேவேளை பௌத்தர்கள் வாழாத பிரதேங்களில் விகாரைகள் எதற்கு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று...
Loading posts...
All posts loaded
No more posts
