Ad Widget

ஓட்டோ சாரதிகளுக்காக வருகிறது புதிய சட்டம்

இலங்கையில் ஓட்டோ வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்காக புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்துக்கு அமைய, பயணிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தும் சாரதிகளின் வயதெல்லை 35 இற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கபடவுள்ளது.

இந்த சட்ட திட்டத்தினை மீறும் ஓட்டோ சாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை இந்த வருடம் நிறைவடைவதற்குள் அமுல்படுத்தவுள்ளதாகவும், குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஓட்டோ சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன், ஒழுக்கமான சாரதிகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts