Ad Widget

பெற்றோல்- சமையல் எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு எதிர்க் கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது இவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள 3 வருட உடன்படிக்கையின் படி இலங்கைக்கு மூன்றாவது கட்ட உதவி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கப் பெறவுள்ளது.

இந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் உடன்படிக்கையில் செய்து கொள்ளப்பட்ட அம்சங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இதன் ஓர் அங்கமாகவே, எரிபொருளுக்கான சூத்திரம் அறிமுகம் செய்யப்படுகின்றது. புதிதாக வரிகள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தில் மக்களை அறிவுறுத்தவுள்ளோம்” என கூறினார்.

Related Posts