Ad Widget

யாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு ??

யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மாநகரை சுத்தமாக்குவதற்காக பலவகையான முன்மொழிவுகள் ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் உள்ளுரில் போதிய சுத்திகரிப்பாளரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு தென்னிலங்கை நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு பணிகளை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தனியார் நிறுவனம் உள்ளுரில் சுத்திகரிப்பு தொழிலாளர்களை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதை கருத்தில் கொண்டு தென்னிலங்கையிலிருந்து சிங்கள தொழிலாளர்களை யாழ்ப்பாணம் தருவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மாநகரசபை சுகாதாரமற்றிருப்பதற்கு யாழ்ப்பாணத்து சுத்திகரிப்புத் தொழிலாளிகளது தரமின்மையே காரணம் என்றும் அதனால் தென்னிலங்கையிலிருந்து ஒரு தொகுதி தொழிலாளர்களை யாழ் மாநகருக்கு வரவழைத்து யாழ் மாநகரை அழகுபடுத்த முடியும் என்றும் ஆனோல்ட் திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல் தெரிவிக்கின்றன.

Related Posts