Ad Widget

வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கம்: அரசாங்கத்திற்கு சுமந்திரன் காலக்கெடு!

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்குள் அரசியல் தீர்வு முயற்சிகள் சரியான திசையில் முன்னேறுகின்றதா என்பதில் தெளிவான பதில் கிடைக்க வேண்டும் எனவும் அப்படி முன்னேறுமாக இருந்தால் இந்த வருட இறுதிக்குள் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான காலக்கெடு ஒன்றை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப் பகுதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனில், வடக்கு கிழக்கு மழுவதும் நிர்வாக முடக்கத்தினை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தினை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டமைப்பு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts