- Tuesday
- May 12th, 2026
பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சியினது அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
பெற்றோல் மற்றும் டிசெலின் விலைகள் இன்று (30) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்ரைன், டிசெல் சுப்பர் மற்றும் ஓட்டோ என்பனவற்றின் விலைகள் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகும்...
“இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற கோசம் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனாலேயே இன்று ஐ.தே.முன்னணிக்கு ஆதரவை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூட்டமைப்பும் பெருமிதமடைகின்றது. எம் நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்தவர்களின் ஜனநாயகமாகவே இன்றுவரை காணப்படுகின்றது. சகல இனத்தவர்களையும் உள்ளடக்குகின்ற ஜனநாயகம் நாட்டில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு பிரச்சினைகளையும், அழிவுகளையும் சந்தித்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நாம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே...
மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார மற்றும் சுமந்திரன் எம்.பி.கள் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான...
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னனி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. மாறாக ஐக்கிய தேசிய முன்னிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு...
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் குறித்த சொகுசு பேருந்து நேற்று (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது. இதற்க்கு படகுகளின் தடுமாற்றத்தாலும் இச் சமபவம்...
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எழு நீ“ நிகழ்விற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகான அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த நிகழ்வினையும் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வவுனியா நகரசபைக்கு ஒரு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதுடன் பல பேரின் வேலைவாய்ப்புக்களையும் இழக்கச் செய்து பல வர்த்தக நிலையங்களை மூடச் செய்த முன்னாள்...
யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வீட்டில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் வாகானம் திருத்தும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம்...
பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக...
தமிழரின் மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 69. வடமராட்சி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம், தமிழரின் மரபுக் கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்தார். அவரால் பல மாணாக்கர்கள்...
லீசிங் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். “நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தவணைப் பணத்தை வசூலிப்பதற்கு...
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான்...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...
வாள்வெட்டுக்கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும் புலம் பெயர் தேசங்களிலும் செவ்வாய்க்கிழமை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை...
Loading posts...
All posts loaded
No more posts
