பல பிரதேசங்களுக்கு இன்றும் பலத்த மழை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...

வாள்வெட்டுக் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? – சிவாஜிலிங்கம்

வாள்வெட்டுக்கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும் புலம் பெயர் தேசங்களிலும் செவ்வாய்க்கிழமை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
Ad Widget

வவுனியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய புலனாய்வாளர் – நெகிழ்ச்சியில் தமிழர்கள்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை...

உயிராபத்து காரணத்திற்காக மீண்டும் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்று (புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல்...

சபாநாயகரை ஆதரித்து குடாநாட்டில் சுவரொட்டிகள்

சபாநாயகர் கரு ஐயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன ‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள் தமக்கும் நாட்டிற்கும் பெருமை’ எனும் தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த சுவரொட்டிகளில் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளுக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை நிலை...

ஆவா குழுவின் தலைவர் அசோக் மல்லாகம் நீதிமன்றில் சரண்

ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரண்டைந்தார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன. அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை...

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்க்க நிதி கேட்கின்றார்களா? 1954க்கு உடனே அழையுங்கள்!!

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்சவுடன் விசேட கலந்துரையாடல்!

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (28) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்ததாக, விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்கைதிகளின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவான பிரதியமைச்சர்கள் காதர் மஸ்தான், ச.வியாழேந்திரன், இ.அங்கஜன் ஆகியோர் இன்று நாமல் ராஜபக்ச எம்.பியையும், நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சந்தித்து பேசியுள்ளனர். அரசியல்கைதிகளை...

மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்தவர் வீடு அடித்துடைக்கப்பட்டது!

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்தின நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதையறிந்த பருத்தித்துறை பொலிசார் அங்கு சென்று...

உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ மாவீரர் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன்...

தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தி

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும்...

புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுவைத்தார் பிரதமர் மஹிந்த!

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றையதினம் 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய்க்கான புதிய நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டார். பார்வைத் திறன் குறைப்பாடு உடையவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள்,...

மன்னார் மனித புதைகுழி- ஜேர்மன் தூதுவர் நேரடி விஜயம்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் நேரடியாக சென்று அவதானித்துள்ளார். பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தன. இந்நிலையில் 105 ஆவது நாளாக இன்று மீண்டும்...

துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், பொலிஸாரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன. மாவீரர் நாளான இன்று மாலை, துயிலுமில்லங்களில் ஈகச்சுடர் ஏற்றுவதற்காக, புதிதாக நடுகற்கள் நாட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று மாலை அங்கு சென்ற பொலிஸார், துயிலுமில்லங்களில் நாட்டப்பட்டுள்ள நடுகற்களை அகற்றாவிடின், நீதிமன்றத்தில்...

புதுப்பொலிவு பெற்றுள்ள யாழ். பல்கலை வளாக மாவீரர் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ள மாவீரர் நினைவிடத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம்...

ஆளுநரின் பணிப்பின் பேரில் 46 ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம்!!

யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சா­லை­க­ளில் தேவை­யான ஆள­ணிக்­கும் அதி­க­மாக இருந்த 46 ஆசி­ரி­யர்­கள் போதிய ஆசி­ரி­யர்­கள் இல்­லாத பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த வாரம் கல்வி அமைச்­சுக்குப் பய­ணம் மேற்­கொண்ட வட­மா­காண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யப் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­களை அழைத்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது சில பாட­சா­லை­க­ளில் தேவைக்கு மேற்­பட்ட...

நாமல் ராஜபக்ச, சித்தார்த்தன் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்...

கோப்பாய், நல்லூரில் விளக்கேற்றி அஞ்சலி!

மாவீரர் நாளான இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று யாழில் இரண்டு இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டார். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு எதிராக உள்ள பிரதேசம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடம் ஆகியவற்றில் அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பில் திடீரென பறந்த புலிக்கொடி!

இம்முறை மாவீரர்தினத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் இனம்தெரியாதவர்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்தனர். மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்த மின்கம்பத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. சம்பவத்தை அறிந்த புதுக்குடியிருப்பு...

இன்று மாவீரர் தினம்!

ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம்...
Loading posts...

All posts loaded

No more posts